‘ஜி-7’ உச்சி மாநாடு – ஜப்பானில் இன்று தொடக்கம்

மே.19

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ‘ஜி-7’ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத்தலைவர்கள் ஜப்பான் வந்துள்ளனர்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஜி-7 ‘ அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஜி7 உச்சி மாநாடு வரும் 21-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளுடன் இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ், குக் தீவு ஆகிய 7 நாடுகளும் அழைப்பின்பேரில் கலந்து கொள்கின்றன. இதில், கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஹிரோஷிமா அருகே இவாகுனியில் உள்ள கடற்படை விமான தளத்தில் ஏர்போர்ஸ் 1 விமானத்தில் நேற்று வந்தடைந்தனர். அப்போது, பலத்த மழைக்கு இடையே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் தலைவர்களும் குவிகின்றனர். இதன் காரணமாக ஹிரோஷிமா நகரம், பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

‘ஜி-7’ உச்சிமாநாட்டின்போது அணுசக்தி பெருக்கத்தின் அபாயங்கள் குறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பிரச்சினை எழுப்பி விவாதிக்க வகைசெய்வார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *