ஏப்ரல்.21
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அதில் தொடர்புடையை தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் கிராமம் கிராமமாக தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநில ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்டதில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானார்கள். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதைத்தொடர்ந்து, ரஜோரி, பூஞ்ச் மற்றும் மெந்தர் ஆகிய பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து எல்லைத் தாண்டி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர்கள் மீண்டும் எல்லை கடந்து தப்பி விடாமல் இருக்க அப்பகுதி முழுவதும் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளை மூடி அங்கு வாகனப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தேசிய புலனாய்வு அதிகாரிகள் பூஞ்ச் பகுதிக்கு விரைந்து தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்