ஏப்ரல்.17
இந்தியாவில் எலெஸ்கோ நிறுவனம் இரண்டு புதிய ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (இ-பைக்) அறிமுகம் செய்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயணிக்க வகை செய்யும் இந்த இபைக்கின் விலை, ஐபோனின் விலையைவிட குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மாற்றாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதை கருத்தில் கொண்டு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புதிய புதிய மாடல்களில் வாகனங்களை சந்தைகளில் அறிமுகப்படுத்திவருகின்றன.
குறிப்பாக, இரண்டு சக்கர வாகனங்களின் வரவு அதிகம். அந்த வகையில், இந்திய சந்தையில் இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் தற்போது அறிமுகமாகியுள்ளது. எலெஸ்கோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய ஸ்கூட்டர்கள் 69 ஆயிரம் விலையில் கிடைப்பதுதான் ஆச்சரியம்.
வி1 மற்றும் வி2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர்களில் 2.3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். 6-7 மணி நேரம் இந்த பேட்டரியை ஜார்ஜ் செய்ய வேண்டும். அன்றாட வாகன பயன்பாட்டாளர்களுக்கு இந்த ஸ்கூட்டர் வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
இந்த ஸ்கூட்டர்களின் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பகுதியில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் 200 கிலோ எடையை இழுக்கும் திறன் கொண்டவை. அதுமட்டுமின்றி, ப்ளுடூத் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ், சைடு ஸ்டாண்டு சென்சார், எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் கீலெஸ் இக்னீஷியன் போன்ற அதிநவீன வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆரம்ப விலை வெறும் 69,999 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலை.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை, ஆப்பிள் ஐபோன் 14 –ஐ விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஐபோன் -14 செல்போன் விலை 79,900 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களின் புதிய தயாரிப்புகளான வி1 மற்றும் எலெஸ்கோ வி2 ஆகிய 2 புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எலெஸ்கோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இவ்வளவு குறைவான விலையில் ஸ்கூட்டர் கிடைப்பதால், இந்திய சந்தையில் இருக்கும் மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எலெஸ்கோ ஸ்கூட்டர்கள் பெரிய போட்டியாளராகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.