தர்மபுரியில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி இந்தியன் வங்கி அருகில் கோல்டன் தெருவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி உற்சவங்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். வளையல், புடவை, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, பழங்கள் மற்றும் சீர்வரிசையுடன் வந்து பக்தர்கள் திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் லட்சுமி நாட்டான்மாது நகர் மன்ற தலைவர், குமரேசன் துணை ஆட்சியர், ஜெயந்தி தமிழ்மணி முன்னாள் கவுன்சிலர், ஜெகன் 13 வது வார்டு கவுன்சிலர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் அன்பு, துணைத் தலைவர் பாரதி மற்றும் கோல்டன் தெரு ஆதிதிராவிட மகானை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்தத் திருக்கல்யாண நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.