மே.20
ரஷ்ய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் வரும் 23ம் தேதி சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, சீன அதிபர் ஜின்பெங் மற்றும் உயர் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்றுவருகிறது. இந்தப் போரின் ஆரம்பத்தில் இருந்தே சீனா, ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது. ஒன்றரை ஆண்டாக போர் நீடித்து வரும் நிலையில், அதனை நிறுத்துமாறு உலக நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு உதவி செய்வதாக சீனாவும் உறுதியளித்தது.
அதன்படி, சீன அதிபர் ஷி ஜின்பெங் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் முடியவில்லை.
இந்த நிலையில், தற்போது ரஷ்ய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் வரும் 23-ந் தேதி சீனாவுக்கு சென்று அதிபர் ஜின்பெங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். அப்போது, இரு நாடுகளிடையேயான வர்த்தகம் மற்றும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவர் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.