சீனாவின் முதல் பயணிகள் விமானம் சேவையை தொடங்கியது

சீனா உருவாக்கிய C919 எனப்படும் முதல் பயணிகள் விமானம் இன்று தனது சேவையை தொடங்கியது!

சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள C919 எனப்படும் முதல் பயணிகள் விமானம் இன்று தனது சேவையை தொடங்கியது.

ஷாங்காயின் ஹாங்கியாவோ சர்வதே விமான நிலையத்திலிருந்து 130 பயணிகளுடன் தலைநகர் பெய்ஜிங்கிற்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.

ஏர்பஸ் A320neo மற்றும் போயிங் 737 MAX ஜெட் விமானங்களுக்கு போட்டியாக C919 விமானத் திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கமர்ஷியல் ஏவியேஷன் கார்ப்பரேசன் ஆஃப் சீனா நிறுவனம் உருவாக்கிய இந்த விமானம், சீனாவின் சிறந்த புதுமையான சாதனைகளில் ஒன்று என அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டியுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *