சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.32 – கோவை வேளாண் பல்கலைகழகம் கணிப்பு

ஏப்ரல்.26

தமிழகத்தில் மே முதல் ஜூன் வரை அறுவடையாகும் சின்ன வெங்காயம் கிலோ 32 ரூபாய் வரை விற்பனையாகும் என வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை சின்ன வெங்காயம் பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும். தமிழ்நாட்டில், திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம் உற்பத்தியில் அதிக பங்கு உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுவதால் உள்நாட்டு தேவைக்கு ஏற்ப கர்நாடகா, ஆந்திராவில் இருந்து சின்ன வெங்காயம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து சின்ன வெங்காயம், மேற்கு ஆசியா, இலங்கை, பங்களதேஷ், மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில், சின்ன வெங்காயத்தின் முக்கிய உற்பத்தியாளராக தமிழ்நாடு உள்ளது. தற்போது திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்தைக்கு பெரம்பலூர், தாராபுரம், பல்லடம் ஆகிய இடங்களிலிருந்தும் மற்றும் கர்நாடகாவிலிருந்தும் சின்ன வெங்காய வரத்து உள்ளது. விலை முன்னறிவிப்பு திட்டமானது, கடந்த 23 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை அறுவடையின்போது (மே முதல் ஜூன் வரை) கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சந்தை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என்று வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *