சாதிக் கணக்கெடுப்பு நடத்த முடியுமா?

தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கடந்த 2020 ம் ஆண்டு டிசம்பர் 7 ம் தேதி  அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படவில்லை என்ற அந்த ஆணையத்தின் தலைவராக இருந்த முன்னாள் நீதிபதி குலசேகரன் தெரிவித்து உள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று அனைத்திந்திய சமூக நீதி மாநாட்டில் பேசுகையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பேட்டியளித்துள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் தலைவர் நீதியரசர் குலசேகரன்,முதலமைச்சரின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

சமூகநீதியை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம். தமது தலைமையில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் அமைக்கப்பட்ட இரண்டே மாதத்திற்குள் தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஆணையத்தின் பணிகள் முழுமையடையவில்லை. தங்களின் பணிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான முதற்கட்ட பணிகளை நிறைவு செய்து இடைக்கால அறிக்கையை அரசுக்கு அளித்தோம். ஆறு மாத காலத்திற்கு பிறகு ஆணையத்திற்கான கால அவகாசம் புதுப்பிக்கப்படவில்லை என்பதால் ஆணையம் தொடர்ந்து செயல்பட முடியவில்லை என்றும் குலசேகரன் பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *