பெண்காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி

கோவையில் பெண் காவலர்களுக்கான கிரிக்கெட்..! ரன்களை குவித்த காவலர்கள்..!!

ஏப்ரல்.23

கோவையில் பெண் காவலர்களுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பெண் காவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பவுன்டரிகள் மற்றும் சிக்சர்களை விளாசி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

காவல்துறையில் பெண்கள் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கோவை மாநகர தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் பெண் காவல் ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான Yellow Warriors என்ற அணியும், பெண் காவல் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான Blue Fighters என்ற அணியும் மோதின.

Best of Three என்ற கணக்கீட்டின்கீழ் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் போட்டியில் டாஸில் வென்ற Yellow Warriors அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. Yellow Warriors அணி நிர்ணியிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய Blue Fighters அணி 3.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் டாஸில் வென்ற Blue Fighters அணி பவுலிங்கை தேர்வு செய்தது. Yellow Warriors அணி நிர்ணியிக்கப்பட்ட 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய Blue Fighters அணி 6.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 2-0 என்ற கணக்கில் பெண் காவல் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான Blue Fighters அணி அபார வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வெற்றிக் கோப்பையை வழங்கினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *