கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே ‘மனதின் குரல்’: பிரதமர் மோடி

பிரதமரின் 100-ஆவது ‘மனதின் குரல்’ (Mann Ki Bath) உரை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30ம் தேதி) ஒலிபரப்பானது. பிரதமா் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக கடந்த 2014, அக்டோபா் முதல் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறாா். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷனில் பிரதமரின் உரை
ஒலிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரதமர், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவதுடன், பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக செயலாற்றும் தனி நபா்களை பாராட்டி, அவா்களுக்கு அங்கீகாரம் வழங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளாா்.

மனதின் குரல் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி வருவதோடு, தமிழின் பெருமை குறித்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக செயலாற்றும் பலவேறு மக்கள் குறித்தும் பலமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். பிரதமர் மோடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பப்பட்டது.

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது வார நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையை, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கேட்டு மகிழ்ந்தனர். சென்னை ஆளுநர் மாளிகையில் 100ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை மாணவர்களுடன் ஆளுநர் ஆர்என்.ரவி கேட்டார். ஆளுநர் ரவியுடன் பல்துறை முக்கிய பிரமுகர்களும் 100ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டனர்.

100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள், புனிதத் தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை மேம்படும். வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு முன்பு நம் நாட்டில் உள்ள 15 இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும். இந்த மனதின் குரல் நிகழ்ச்சி நாம் என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

” மனதில் இருந்து ஒரு குரல் நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களான உங்களை நான் விட்டு விலகுவதுமில்லை.. உங்களை பிரிவதும் இல்லை.. உங்கள் கூடவே இருப்பது போன்று தான் எனக்கு இருக்கிறது” என்றார். மேலும், நிகழ்ச்சிக்காக மக்களின் செய்திகள் மற்றும் கடிதங்களைப் படித்து பலமுறை உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார். மனதின் குரல் நிகழ்ச்சி கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளின் வெளிப்பாடு என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *