கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத்திருவிழா – சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் கோலாகலத் தொடக்கம்

ஏப்ரல்.19

விழுப்புரம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது. சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூழ், கஞ்சிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து கூத்தாண்டவரை தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில், ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து கூழ் மற்றும் கஞ்சிக் குடங்களுடன் மேளதாள முழங்க ஊர்வலமாகக் கொண்டு வந்து, கூத்தாண்டவர் கோவில் அருகிலுள்ள அம்மன் கோவில் வைத்து மாவிளக்கு ஏற்றி படையில் இட்டு பொது மக்களுக்கு கூழ் கஞ்சிகளை வழங்கி வழிபாடு செய்தனர்.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 18 நாட்கள் நடக்கும் இந்த சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான சாமி திருக்கண் திறத்தல் மற்றும் தாலி கட்டுதல் நிகழ்ச்சி அடுத்த மாதம் இரண்டாம் தேதியும் அதற்கு அடுத்த நாள் மூன்றாம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மே.5ம் தேதி தர்ம பட்டாபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *