குழந்தைகள் திருமணத்தை தடுப்பது எப்படி?

‘இந்தியா சைல்டு புரொடெக்‌ஷன்’ என்ற குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திலும் மூன்று சிறுமிகள் குழந்தைத் திருமணத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். அதே நேரத்தில், ஒரு நாளில் சராசரியாக மூன்று வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுவது, இந்த பிரச்சனைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எவ்வளவு குறைவாக உள்ளன என்பதை காட்டுகிறது.

தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம்
உலகளவில் நடைபெறும் குழந்தைகள் திருமணத்தில் 34% இந்தியாவில்தான் நடைபெறுகின்றன என்று சொல்கிறது.

இந்திய சட்டங்கள் மற்றும் திருமண வயது வரையறை
பெண்கள் – குறைந்தபட்ச திருமண வயது: 18
ஆண்கள் – குறைந்தபட்ச திருமண வயது: 21
இந்த வயதிற்கும் குறைவாக நடைபெறும் திருமணங்கள் குழந்தைத் திருமணங்கள் என அழைக்கப்படுகின்றன.

குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதால்
கல்வியை இழக்க வேண்டியுள்ளது. சிறுமிகள் பள்ளியை விட்டு விலக நேரிடுகிறது. சொந்தக் காலில் நிற்க முடியாமல குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் வாழ வேண்டியதாகிறது.
சுகாதாரப் பிரச்சனைகள்: ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு.குடும்ப வன்முறை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது

குழந்தை திருமணத்தை நடத்துபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.குற்றம் செய்தவர், அது குழந்தைத் திருமணம் எனத் தெரியவில்லை என நிரூபித்தால் தண்டனையிலிருந்து விடுபடலாம்.

திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முயற்சி – சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.பள்ளிகளில் பாலியல் கல்வி, குழந்தை நல பாடங்கள் அறிமுகம் செய்ய வேண்டும்.சட்டங்களை வலுப்படுத்தல், சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவை.

குழந்தைத் திருமணங்களுக்கு முதன்மைக் காரணம் குடும்பத்தில் நிலவும் வறுமை. குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் வலிமையாக இல்லாதபோது, பெண் குழந்தைகளைச் சிறு வயதிலே திருமணம் செய்துவைக்கும் முடிவைப் பெற்றோர் எடுக்கின்றனர். குழந்தைகளுக்குக் கல்வி சரியாகக் கிடைக்காதபோதும், பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் கல்வி கற்பதில் தடை ஏற்படும்போதும் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கின்றன.

குழந்தைத் திருமணங்களில் ஈடுபடுவோரைத் தண்டிப்பதற்கான சட்டங்களையும் வலுப்படுத்த வேண்டும்.
#ChilaMirrage #TamilNews #dinakuzal #குழந்தைகள்திருமணம்

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *