கள்ளச்சாராய விவகாரம்: விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

May 15,2023

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது. இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணத் தொகை வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து, உடல்நிலை குறித்து கேட்டறியவும், நிவாரண தொகையை வழங்கவும் இன்று பிற்பகல் 2 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *