கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி! – அமைச்சர் தோல்வி!

May 13,2023

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக்கைவிட 40 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தோல்வி அடைந்தார்.

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 36 மையங்களில் வாக்கு என்னும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 36 அறைகளில் 4256 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு என்னும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. கர்நாடக தேர்தல் தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 125க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 65 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20க்கும் இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக்கைவிட 40 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தோல்வி அடைந்தார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதித்து பாஜக சார்பில் அமைச்சர் அசோக் போட்டியிட்டார். இந்நிலையில், பாஜக அமைச்சர் அசோக்கை விட 40 ஆயிரம் வாக்குகள் பெற்று டி.கே.சிவகுமார் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *