கர்நாடக தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… எடியூரப்பா மகனுக்கு வாய்ப்பு..!

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 32 பேரும், பட்டியல் இனத்தவரில் 20 பேரும், பட்டியல் பழங்குடியினரில் 16 பேரும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கர்நாடகாவில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி நடைபெறகிறது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் 20ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 21ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 24 கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முதற்கட்டமாக 189 வேட்டபாளர்களின் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகாம்வ தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும், இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 52 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 32 பேரும், பட்டியல் இனத்தவரில் 20 பேரும், பட்டியல் பழங்குடியினரில் 16 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையே ஒப்பந்ததாரர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஈஸ்வரப்பா, இந்த முறை தேர்தலில் போட்டியிட வில்லை என்று தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *