கர்நாடக சட்டப்பேகர்நாடக சட்டப்பேரவைத்தேர்தல் 2023..! இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்..!! ரவைத்தேர்தல் 2023..! இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்..!!

மே.8

கர்நாடகாவில் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

கர்நாடகாவில் 224 தொகுதிகளை கொண்ட சட்டப் பேரவைக்கு வரும் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த மாதம் 24-ந் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து, கர்நாடகாவில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமாகத் தொடங்கியது.

அதன்படி, பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் நோக்குடன் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றன.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு கர்நாடக மாநிலத்தில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே தங்க அனுமதி அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், நட்சத்திர பேச்சாளர்கள், பிறமாநில கட்சி நிர்வாகிகள் உளிட்டோரும் மாலை 6 மணியுடன் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் தலைவர்களும் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, நாளை வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வுபெறுவதையொட்டி, 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *