மணிரத்னம் டைரக்ஷனில் கமல் ஹீரோவாக
நடித்துள்ள ‘தக்லைஃப்’ படத்தில் இடம் பெற்றுள்ள
படுக்கை அறை காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்த படத்தில் கமல் மனைவியாக அபிராமி
நடித்துள்ளார்.
டிரெய்லரில் கமல் –அபிராமியின் படுக்கை
அறைக்காட்சி இடம் பெற்றுள்ளது.
இருவரும் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும்
காட்சியே அது.
இது சர்ச்சையாகி உள்ளது.
ஏன் ?
கமலை விட அபிராமி 30 வயது இளையவர்.
‘இருவரின் ரொமான்ஸ் காட்சிகள் தேவை இல்லாதது’
என வலைத்தளங்களில் ஒரு தரப்பு போர்க்கொடி
உயர்த்த-
இன்னொரு தரப்பு இந்த காட்சிக்கு ஆதரவுக்கரம்
நீட்டியுள்ளது.
‘இது கற்பனை கலந்த சினிமா. வயதை எல்லாம்
பார்க்க வேண்டாம்’ என பெட்ரூம் காட்சிக்கு
வக்காலத்து வாங்குகிறார்கள்.
இந்த காட்சியால்
படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்து விட்டது,
நிஜம்.
–