கன்னியாகுமரி – பாதிரியார் ஆன்டோ பெனடிக் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

கன்னியாகுமரியில் பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியர் ஆன்டோ மீது இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனட்டிக் ஆன்டோ (வயது 29). இவர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்தார். இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்பேற்றார்.

அண்மையில், பாதிரியார் பெனட்டிக் ஆன்டோ பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி சர்சையை ஏற்படுத்தியது. மேலும், சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட்களும் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது,

இந்த நிலையில், பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரில், பெனடிக்ட் ஆன்றோ பேச்சிப்பாறை சர்ச்சில் பாதிரியாராக இருந்த சமயத்தில் புகாரளித்த பெண் பிரார்த்தனைக்காக சென்றதாகவும், அப்போது பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும். உடலில் மோசமாக தொட்டதாகவும். பின்னர் வாட்ஸ் அப் மூலம் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பியதாகவும். அவரது அந்தரங்க உறுப்புக்களை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் அந்த இளம் பெண் புகாரில் கூறியிருந்தார்.

இதனை அடுத்து பாதிரியார் தலைமறைவானார். அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். மேலும், அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது லேப்டாப்பில் பல ஆதாரங்கள் இருப்பதால் லேப்டாப்பை பறிமுதல் செய்ய காவல் துறையினர் முயற்சி மேற்கொண்டு இருந்த நிலையில் பாதிரியார் பெனடிக் ஆன்டோவை நாகர்கோவிலில் வைத்து கடந்த மாதம் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் எட்டு மணி நேரமாக நாகர்கோவில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவு அலுவலகத்தில் பாதிரியார் பெனட்டிக் ஆண்டோவிடம் விசாரணை நடந்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு, அங்கு தனக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தன்னை பாளை சிறையில் மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து பாளை சிறைக்கு மாற்றப்பட்டார்.

மேலும் சைபர் கிரைம் போலீசார் கோர்ட்டில் பாதிரியார் பெனடிக் ஆன்றோவை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்தனர்.அதனை தொடர்ந்து ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற உத்தரவிட்டது. அதன் பெயரில் பாளை சிறையில் இருந்து பாதிரியார் பெனட்டிக் ஆன்றோவை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பல பெண்கள் உடனான தொடர்பான விஷயங்கள் தெரிந்து கொண்டு மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குமரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு இளம் பெண் பாதிரியார் மீது பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது இரண்டாவதாக ஒரு வழக்கு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் கூடிய விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர், அதேபோன்று மேலும் பாதிரியார் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *