ஓடிடி தளங்களில் மது, புகையிலைக்கு எதிரான வாசகங்கள் கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு..

May 31, 2023

ஓடிடி தளங்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மக்களின் மிக முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் திரைத்துறையிலும் நவீன தொழில்நுட்பங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் ஓ.டி.டி. தளம் திரைத்துரியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பும் இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படங்களில் இருப்பது போன்று, ஓடிடி தளங்களுக்கு தணிக்கை கிடையாது. இதனால் ஆபாசக் காட்சிகள், மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், ஓடிடி தளங்களில் புகையிலை எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்வது பற்றி மத்திய சுகாதாரத்துறை , தகவல் மற்றும் ஒலிப்பரத்துறை அமைச்சகத்துடன் அண்மையில் ஆலோசனை நடத்தியது. ஓடிடி தளத்தில் இனி வெளியாகும் படங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருள்கள் வரும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை மீறும் படக்குழு மீது மத்திய சுகாதாரம் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், தொடக்கத்திலும் நடுவிலும் குறைந்தபட்சம் முப்பது வினாடிகள் நீடிக்கும் வகையில் , புகையிலை எதிர்ப்பு வாசகங்கள், சுகாதார இடத்தைக் காண்பிக்க வேண்டும் என்றும், புகையிலை பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் போது அல்லது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவற்றின் பயன்பாட்டின் போது, திரையின் அடிப்பகுதியில் ஒரு முக்கிய நிலையான செய்தியாக புகையிலை எதிர்ப்பு சுகாதார எச்சரிக்கையை அவர்கள் காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் பின்பற்றும் விதிகள் ஓடிடி இயங்குதளங்களுக்கும், வரைவு அறிவிப்பின் படியும் பொருந்தும் எனவும் கூறியுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *