ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்கள்- இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

மே.18

ஒடிசா மாநிலத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளை பிரதமர் நரேந்திமோ மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டுவது மற்றும் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துகொள்கிறார். புதுடெல்லியில் இருந்து இன்று பிற்பகல் காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், ஒடிசாவின் பூரி மற்றும் ஹவுரா இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

இதன்பின் பூரி மற்றும் கட்டாக் ரெயில்வே நிலையங்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்கிறார். இந்த மறுகட்டமைப்புடன் கூடிய ரெயில் நிலையங்கள், அனைத்துவிதமான நவீன வசதிகளையும் உள்ளடக்கி, ரெயில் பயணிகளுக்கு உலக தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *