இன்றைய ஐ.பி.எல் போட்டி

ஐ.பி.எல் கிரிக்கெட்: சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்

ஏப்ரல்.23

ஐ.பி.எல் போட்டியின் இன்றை ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.

16வது ஐ.பி.எல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன. ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாக 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில், கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றி , 4 தோல்விகளைப் பெற்றுள்ளது.

சென்னை அணி இதுவரை 4 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் களத்தில் உள்ளது. வெற்றிப்புள்ளிகளை அதிகரிக்க சென்னை அணியும், சரிவில் இருந்து மீண்டு வர கொல்கத்தா அணியும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்த காத்திருப்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாகவே இருக்கும்.

இதேபோல், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி அதில் 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. இதேபோல், பெங்களூரு அணி 6 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டு 6-வது இடத்தில் இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் போராடும் என்பதால் ரசிகர்களுக்கு இன்றைய ஆட்டம் உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *