ஏற்காடு மலைப்பாதையில் திடீரென பற்றி எரிந்த கார்… ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

ஏப்ரல் 16

கோடையை தணிப்பதற்காக நாமக்கல்லில் இருந்து ஏற்காடு சென்ற கார் ஒன்று மலைப்பாதையில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், தொடர் விடுமுறை காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குடும்பத்தினரோடு ஏற்காடு சென்று வருகின்றனர் . இந்த நிலையில் நாமக்கல்லில் இருந்து பொறியாளர் கவினேஷ் என்பவர் தனது அம்மா மற்றும் நண்பர்களோடு, தனது டஸ்டர் காரில் ஏற்காட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஏற்காடு மலைப்பாதையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவை கடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென காரில் இருந்து புகை வெளியே வந்துள்ளது . இதனை அறிந்த கவினேஷ் உடனடியாக காரை நிறுத்திவிட்டு தனது அம்மா மற்றும் நண்பர்களை கீழே இறக்கினார். இறங்கிய சில நிமிடங்களிலேயே கார் முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது . இதனை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *