ஏன் அப்படி செய்தார் ஜெய் ஷா… சர்ச்சையான சைகை!

May 30, 2023

நேற்றை ஐபிஎல் போட்டியின் போது ஜெய் ஷா காட்டிய சைகை சர்ச்சை ஆகியுள்ளது. ஜெய் ஷா ஏன் அப்படி செய்தார் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா. ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக உள்ளார். நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 16 வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார் ஜெய் ஷா. அப்போது அவர் செய்த சைகைதான் தற்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது.

16 வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற வேண்டிய இந்த போட்டி மழையால் நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 214 ரன்களை குவித்தது. நேற்றும் மழை குறுக்கிட்டதால் சேஸ் செய்த சென்னை அணிக்கான ஓவர்கள் 15ஆக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றியுடன் கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் ஐந்தாவது முறையாக சென்னை அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற சென்னை அணிக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றை போட்டியை கேலரியில் அமர்ந்து பார்த்த பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, சென்னை அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையிருந்த நிலையில், தனது கோபத்தை காட்டும் வகையில் ஆபாச சைகை காண்பித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஜெய் ஷாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் சென்னை வெற்றி பெற வேண்டும் என்று நமக்கு இருக்கும் வெறி போன்றுதான் குஜராத் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி அவருக்கும் இருந்திருக்கும், அதன் வெளிப்பாடுதான் இது என பலர் ஜெய் ஷாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *