இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா : இந்தியா சார்பில் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு..

இங்கிலாந்து அரசராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டவுள்ள விழாவிற்கு இந்திய அரசு சார்பில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்ர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ராணி 2-ம் எலிசபெத் நீண்ட காலம் ராணியாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி ராணி எலிசபெத் தனது 96 வது வயதில் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக முடிசூட்டவுள்ளார். அதன்படி, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, நடப்பு ஆண்டு மே மாதம் 6-ந்தேதி (நாளை) நடைபெற உள்ளது. இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதில், பாரம்பரிய முறைப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் ஏறுவார். அதன்பிறகு மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வாதம் செய்யப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.

மேலும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் நாளை மன்னர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில், அவரது மனைவி கமீலாவும் கலந்து கொள்கிறார். இந்த முடி சூட்டு விழாவில் பங்கேற்க ஒவ்வொரு நாட்டை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய அரசு சார்பில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாகஅவர் இன்று இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *