ஆஸ்கர் விருது டீமை சந்தித்த எம்.எஸ்.தோனி..! சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்..!!

மே.11

ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” படக்குழுவினரை சென்னையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வசித்து வரும் பொம்மன் – பெள்ளி தம்பதி, யானைகள் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற 2 குட்டி யானைகளை பராமரித்து தங்களின் குழந்தைகள் போல் வளர்த்து வந்தனர்.

இந்த குட்டி யானைகளை பொம்மன் – பெள்ளி தம்பதி எவ்வாறு பராமரித்து வந்தனர் என்பதை மையமாக கொண்டு தி எலிபன்ட் விஸ்பரரஸ் என்ற பெயரில் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இந்த ஆவண படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். குனீத் மோங்கா தயாரித்திருந்தார். இந்த படத்தில் மிகவும் நேர்த்தியாக காட்டப்பட்டிருந்த பொம்மன்-பெள்ளி தம்பதிக்கும், யானை குட்டிகளுக்கும் இடையேயான உறவு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த ஆவணப்படம் சமீபத்தில் நடந்த 95வது ஆஸ்கர் விழாவில் விருதையும் வென்றது. இதன்மூலம் பொம்மன்-பெள்ளி தம்பதி உலகம் முழுவதும் புகழ் பெற்றனர்.

இந்நிலையில், ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி மற்றும் பொம்மன் – பெள்ளி தம்பதி ஆகியோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனியை நேரில் சந்தித்தனர். அப்போது, படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய தோனி, அவர்கள் அனைவருக்கும் 7 ஆம் எண் கொண்ட அவரவர் பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியை பரிசாக அளித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார். பொம்மன்-பெள்ளி தம்பதியுடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *