ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – பாஜகவின் தேர்தல் வாக்குறுதி!!

வருகிற மே 10ம் தேதி 224 தொகுதிகளில் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கி உள்ளது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே தீவிர போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள், தினமும் அரை லிட்டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம், சட்டவிரோத குடியேறிகளை களைய கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்றும் மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *