அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை கம்பம் வருகை

May 28, 2023

சுருளிபட்டியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை கம்பம் வரவழைக்கப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் மூணாறு பகுதி மக்களை பயமுறுத்தியும், 20 பேரை கொன்ற
அரிக்கொம்பன் என அழைக்கபடும் காட்டுயானையின் அட்டகாசம் அதிகரித்ததினால்
அச்சமடைந்த பொதுமக்கள் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் யானை பிடிக்கபட்டு,
தமிழக- கேரளா எல்லை பகுதியில் மங்களதேவி கண்ணகி கோவில் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. இந்த நிலையில் இங்கு விடப்பட்ட இந்த அரிக்கொம்பன் காட்டு யானை கடந்த 20 நாட்களாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை, மணலாறு,
இரவங்களாறு உள்ளிட்ட பகுதியில் சுற்றி திரிந்த நிலையில் தேக்கடி வனப்பகுதிக்கு அருகாமையில் குடியிருப்பு பகுதிக்கு அருகே 100 மீட்டருக்கு வந்த போது வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், சத்தம் போட்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இந்த நிலையில் நேற்று மதியம் கிடைத்த ரேடியோ காலர் சிக்னல் படி தேனி மாவட்டம்
லோயர் கேம்ப் பவர் ஹவுஸ் அருகில் உள்ள வனப்பகுதியில் இருப்பதாக தகவல்
கிடைத்தது. மேலும் குமுளி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை அரிக்கொம்பன் யானை கடந்து சென்றுள்ளதாகவும் சிக்னல் பதிவாகியுள்ளது. இதனையடுத்து யானை தேக்கங்காடு வனப்பகுதியில் இருந்து கம்பம் மெட்டு நோக்கி நகர்ந்து செல்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதனால் மூணாறு அருகே உள்ள சின்னக்காணல் மற்றும் சாந்தம்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும் யானையின் கழுத்தில் இணைக்கப்பட்டுள்ள ரேடியோ காலரில் இருந்து கிடைக்கும் ஜிபிஎஸ் சிக்னல்கள் மூலம் உன்னிப்பாகக் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானையின் உதவியுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் மேகமலை கோட்டத்தில் உள்ள வெள்ளைமலையில், கால்நடை மருத்துவ குழுவினர் உதவியுடன் இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.

மேலும் கும்கி யானைகளைப் பயன்படுத்தி யானையைப் பிடிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைக்க உத்தரவிட்டது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை தேனி மாவட்டம் கம்பத்தில் உலா வரும் அரிகொம்பன் யானையை பிடிப்பதற்காக அழைத்து வரப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி கும்கி யானை மூலம் அரிக்கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் ஆனைமலை குளியல் காப்பகத்தில் இருந்து சுயம்பு, அரிசி ராஜா என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. அதேபோல முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போது சுருளிபட்டி பகுதியில் அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால சுருளி அருவிக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் விவசாயிகளை விளை நிலங்களுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *