அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா … கவுண்டமணி ஸ்டைலில் கருத்து சொன்ன முதல்வர்!

Fri, 14 Apr 2023
அரசியலில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம் என்று சொல்லி இருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை. முன்னாள் முதல்வர் லட்சுமண் சவதி விலகல் குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தலில் நடைபெற இருக்கிறது. இதில் 224 தொகுதிகளில் 189 தொகுதிகளில் போட்டியிட பாஜக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டு அமைச்சர்கள் உட்பட 10 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காதவர்கள் பலரும் கட்சித் தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் பெலகாவி மாவட்டத்தில் அதானி தொகுதி முன்னாள் துணை முதல்வர் லட்சுமண சவதிக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. அவருக்கு சீட் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில்தான் அவர் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவை அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரும் பங்கேற்றிருந்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பாஜகவில் இருந்து விலகிய லட்சுமண் சவதி காங்கிரஸில் இணைய இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

லட்சுமணன் சவதியின் விலகல் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அரசியலில் இது ரொம்ப சாதாரணம். அவர் காங்கிரஸில் அரசியல் எதிர்காலத்தை கண்டுவிட்டதால் அங்கு சென்று உள்ளார். ஆனால், காங்கிரசுக்கு 60 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களே இல்லை . சிலரை தங்கள் கட்சியில் சேர்த்து விடுகின்றார்கள். ஆனால் அவர்களால் காங்கிரஸுக்கு எந்த பயனும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *