“அப்போ நல்ல வாய்.. இப்போ நாற வாய்..” பழனிசாமியை தாக்கிய வைத்திலிங்கம்

மே 17,2023

எங்களை விட ஒரு வாக்கு எடுத்துவிட்டால் நாங்கள் அரசியல விட்டே போயிடுறோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஆர். வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று ஒரத்தநாட்டில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்ற துரோகிகளுக்கு அதிமுகவில் இடமில்லை. ஓபிஎஸ், வைத்திலிங்கத்தின் நாடகம் பலிக்காது. துரோகிகள் பற்றி பேசுவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம். எப்போ பார்த்தாலும் தர்மயுத்தம்.. தர்மயுத்தம்; எத்தனை முறை தர்மயுத்தம் பண்ணுவிங்க… ஆட்சியில் இருக்கும்போது தஞ்சை மாவட்டத்துக்கு வைத்திலிங்கம் எதையும் செய்யவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.  இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் ஆர். வைத்திலிங்கம்ம் “முதலமைச்சர் என்ற தகுதியே இல்லாத ஒரு நபர் அந்த பதவியில் இருந்தாரென்றால், அது எடப்பாடி பழனிசாமி. பிச்சைகாரிக்கு யானை மாலை போட்டு ராணி ஆக்கியதை போல… எடப்பாடி சசிகலாவின் கால்களில் விழுந்து  பதவி வாங்கிவிட்டார். எங்களை விட ஒரு வாக்கு எடுத்துவிட்டால் நாங்கள் அரசியல விட்டே போயிடுறோம். 2021 ஆம் ஆண்டு தேர்தலின்போது என்னை வல்லவர், நல்லவர் என எனக்காக பிரச்சாரம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அன்று நல்ல வாயில் பேசியவர், இப்போது நாற வாயுடன் பேசுகிறார். தஞ்சாவூரில் சட்டக்கல்லூரி வேண்டுமென கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் ரூ.150 கோடிக்கும் மேல் செலவாகும்… என்னால் செய்ய முடியாது எனக் கூறினார். அதிமுகவை அழித்துக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை விட்டு வெளியேற வேண்டும்” என்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *