இங்கிலாந்து துணை பிரதமர் ராஜினாமா

அதிகாரிகளை கொடுமைப்படுத்தியதாகப் புகார் – இங்கிலாந்து துணை பிரதமர் ராஜினாமா

ஏப்ரல்.22

இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமர் டொமினிக் ராப், பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமரான டொமினிக் ராப் நிதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துவந்தார். இந்நிலையில், டொமினிக் ராப், தமது துறை சார்ந்த அதிகாரிகளை மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவர் கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த விசாரணையின் அறிக்கை இங்கிலாந்து பிரதமரிடம் கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கை குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், துணை பிரதமட் டொமினிக் ராப் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் விசாரணைக்கு அழைப்பு விடுத்தேன், அதில் ஏதேனும் கொடுமைப்படுத்தியது கண்டறியப்பட்டால், பதவியை ராஜினாமா செய்வதாக உறுதியளித்தேன். என் வார்த்தையைக் காப்பாற்றுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றார். அதன்பின்னர், அவரது அமைச்சரவையில் இருந்து விலகிய 3-வது முக்கிய நபர் டொமினிக் ராப் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, பிரதமர் ரிஷி சுனக் செய்தியாளர்களிடம் பேசுகையில், டொமினிக் ராப் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும், அதேநேரம் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *