மே.29
அசாம் மாநிலத்தின் முதல் வந்தேபாரத் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டுவருகிறது. அதன்படி, நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் சேவையை மாநிலங்கள் தோறும் படிப்படியாக அறிமுகம் செய்துவருகிறது. தமிழகம், கேரளா, மும்பை என பல மாநிலங்களில் ஏற்கனவே இந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இன்று அசாம் மாநிலத்தில் இந்த சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அசாமின் முதல் அதிகவேக ரயில் சேவை இதுவாகும். இந்த ரயிலானது அசாமின் கவுகாத்தி நகரையும், மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுரி நகரையும் இணைக்கும் வகையில் இயக்கப்படவுள்ளது.
இந்த வந்தே பாரத் ரயில் சேவையானது நாட்டின் 18வது ரயில் சேவையாகவும், மேற்கு வங்கத்தின் 3வது ரெயில் சேவையாகவும் இருக்கும். அசாமிலிருந்து மேற்குவங்கத்திற்கு வாரம் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த அதிகவே ரயிலானது கவுகாத்தி-நியூஜல்பைகுரி இடையோயன 411 கிலோமீட்டர் தூரத்தை ஐந்தரை மணி நேரத்தில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.