தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என
பல மொழிகளில் முன்னணி நடிகையாக
வலம் வந்தவர் ரம்பா.
ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட அனைத்து உச்ச நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தவர்.
கடந்த 2010 ஆம் ஆண்டுஇலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் என்பவரை திருமணம் செய்த ரம்பா, சில ஆண்டுகள் கனடாவில் வசித்து வந்தார்.இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இப்போது , ரம்பா சின்னத்திரை மூலம்
ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.சினிமாவில் இருந்து விலகி இருந்ததற்கான காரணத்தை நடிகை ரம்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரம்பா சொன்ன தகவல்.
எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த போது, என் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரும் வரை
தாய், தந்தை இருவரில் ஒருவராவது அவர்களுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனால் தான் நான் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தேன்.
எனினும் நடிப்பில் எனக்கு இருந்த ஆர்வம் குறையவில்லை.
என்னுடைய முதல் காதல் அப்போதும்
இப்போதும் -எப்போதுமே சினிமாதான் ” எனத்
தெரிவித்துள்ளார்,அழகிய லைலா’
—