மும்மதமும் கலந்த நடிகை !

மூன்று மதங்களும் கலந்த நடிகை வேறு யாருமல்ல- ஷாலினிதான்.

சினிமா தோன்றிய காலத்தில் இருந்து கோடம்பாக்கத்தில் ஸ்ரீதேவி, குட்டி பத்மினி என சில- பல குழந்தை நட்சத்திரங்கள் மின்னியிருந்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பேபி ஷாலினி.

1979 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தார். ஷாலினியின் தந்தை பாபு, ஒரு இஸ்லாமியர். தாயார்- ஆலிஸ் ,கிறிஸ்தவர்.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்ததால் “பேபி ஷாலினி” என்ற பட்டப்பெயருடன் ரொம்ப காலம் அழைக்கப்பட்டார். பிறகு ஹீரோயின் ஆனார்.

1999 ஆம் ஆண்டு ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் நடித்தபோது, படத்தின் நாயகன், அஜித் குமாரை காதலிக்கத் தொடங்கினார், ஷாலினி. இந்த காதல் பின்னர் திருமணத்தில் முடிந்தது. அஜித் குமார் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.

திருமணத்திற்குப் முன்பு தான் ஒப்பந்தமாகியிருந்த இரண்டு திரைப்படங்களை மட்டும் முடித்துக்கொடுத்துவிட்டு திரையுலகிலிருந்து ஒதுங்கினார்.இப்போது முழுமையான குடும்பத்தலைவி.

‘மும்மதமும் எம் மதம்’என்பது ஷாலினிக்கு சாலப்பொருத்தம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *