மதரை-
மதுரை ஆதீம் தம்மை கொலை செய்வதற்கு முயற்சி நடந்ததாக கூறியதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை விளக்கம் தந்து உள்ளது.
கடந்த 2-ம் தேதி மதுரை ஆதீனம் காரில் சென்னைக்கு சென்றபோது, உளுந்தூர்பேட்டை-சேலம் சாலை ரவுண்டானா அருகே, ஆதினம் சென்ற காரும், மற்றொரு காரும் மோதிக் கொண்டன. எனினும், இதுகுறித்து எந்த தரப்பிலும் புகார் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், தன்னைக் கொல்ல முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் புகார் தெரிவித்துள்ளார்.
கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸார் தெரிவித்து உள்ளனர்.
மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதே இந்த விபத்து என்று தெரியவந்துள்ளது.
சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் கூறி உள்ளனர்.
அரிகர தேசிக பரமாச்சாரியர் (பிறப்பு: 25 மார்ச் 1954) மதுரை ஆதினத்தின் 293-வதும், தற்போதைய மடாதிபதியும் ஆவார். 292-வது மடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் 2021 ஆகத்து 13 முக்தி அடைந்ததை அடுத்து, 2019 சூன் 19 முதல் ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக இருந்த இவர் 2021 ஆகத்து 23 அன்று மதுரை ஆதினத்தின் புதிய மடாதிபதியாக, ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் என்ற பெயரில் முடிசூடப்பட்டார்.ய