‘தக் லைஃப்’ படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன.
படத்தை விளம்பர படுத்தும் வேலைகள் பல்வேறு தளங்களில் நடந்து வ்ருகின்றன.
‘இசைப்புயல்’ஏ.ஆர். ரஹ்மான்,தன் பங்குக்கு ஊடகங்களில் பேட்டி அளித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அந்த பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான் தனது நிக்நேமை கேட்டு அதிர்ச்சியடைந்தார். தொகுப்பாளினி டிடி பேட்டி எடுக்கும்போது, ஏ.ஆர் ரஹ்மானை ‘பெரிய பாய்’ என அழைத்தார்.
உடனே ரஹ்மான், ‘பெரிய பாயா?’ என அதிர்ந்தார்.
அதற்கு டிடி, ‘அதுதான் சார் உங்களோட நிக்நேம், ரசிகர்கள் எல்லாம் உங்கள அப்படி தான் கூப்பிடுறாங்க’ என்றார்.
உடனே ஏ.ஆர் ரஹ்மான், ‘வேண்டாம், வேண்டாம், எனக்கு இந்த நிக்நேம் பிடிக்கல, நான் என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன், சின்ன பாய், பெரிய பாய்னு கூப்பிட?’ என கூறினார்.
அவர் சிரித்துக்கொண்டே சொன்னாலும்,மனதில் சீற்றம் இருந்தது.
சமூக வலைதளத்தில் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை குறிப்பிடும் போது ‘பெரிய பாய்’ என்றுதான் செல்லமாக கூறுவார்கள். இதைத்தான் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
==