ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் நடிக்க வந்து பிரபலமாகிவிட்டால், அவர்கள் வீட்டில் இருந்து மேலும் சிலர் வெள்ளித்திரைக்கு வருவது வாடிக்கை.
சிவாஜி மகன் பிரபு, கமல் மகள் ஸ்ருதிஹாசன், கார்த்திக் மகன் கௌதம், சிவாஜி பேரன் விக்ரம் பிரபு, சிவகுமார் மகன்கள் என இந்த பட்டியல் அனுமார் வால் போல் நீளும்.
நக்மாவின் சகோதரி ஜோதிகா, சிம்ரனின் தங்கை மோனல் ஆகியோரும் இதில் அடங்குவர்.
அப்பா மகன், அக்கா தங்கை சினிமாவில் இருந்தாலும், இவர்கள் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் நடிக்கும்போது கதைக்கு ஏற்ப கேரக்டரை தேர்வு செய்வது வழக்கம்.
அந்த வகையில், கார்த்தியின் அண்ணி ஜோதிகா, தம்பி படத்திக் கார்த்தியின் அக்காவாக நடித்திருந்தார். இந்த வரிசையில், ஒரு நடிகை தனது உடன்பிறந்த சகோதரிக்கு அம்மா கேரக்டரில் ஒரு படத்தில் நடித்துள்ளார். அது என்ன படம்?
அந்த படம் நாசர் இயக்கிய- பாப் கார்ன் .
மோகன்லால் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் சிம்ரன், ஜோதி நேவல், ஊர்வசி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இசையமைப்பாரராக இருக்கும் மோகன்லால், நடன கலைஞர் சிம்ரனை காதலித்து திருமணம் செய்துகொள்வார்.
இவர்களுக்கு இடையே ஏற்படும் ஈகோ காரணமாக பிரிந்துவிடுகின்றனர்.
தனது தாய் சிம்ரனுடன் இருக்கும், மகள் மேகா (ஜோதி நேவல்) அப்பா – அம்மா இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார்.
இது ‘பாப்கார்ன்’ படத்தின் கதை.
இந்த படத்தில் மோகன்லால் சிம்ரன் ஜோடிக்கு மகளாக நடித்தவர் ஜோதி நேவல். இவர் உண்மையில் சிம்ரனின் தங்கை.
சிம்ரனுக்கு 2 தங்கைகள் .
பார்வை ஒன்றே போதுமே என்ற படத்தில் நடித்திருந்த நடிகை மோனல் நேவல் சிம்ரனின் மூத்த சகோதரி.
ஜோதி நேவல் அவரின் 2-வது சகோதரி.
–