மதுரையில் இந்த மாதம் 25- ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள த.வெ.க. மாநாட்டை நான்கு நாள் முன்னதாக ஆகஸ்டு 21- ஆம் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆகஸ்ட் 25- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் அதற்கான பாதுகாப்பில் ஈடுபட வேண்டியிருக்கும், எனவே த.வெ.க. மாநாட்டை வேறு தேதியில் நடத்துவது பற்றி பரிசீலிக்குமாறு மதுரை மாவட்ட காவல் துறை கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
மாநாட்டுத் தேதி மாற்றம் பற்றிய அறிவிப்பை கட்சித் தலைவர் விஜய் இன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.