சூர்யாவுக்கு ரசிகன் சொல்லும் யோசனை.

ரசிகன் கருத்து….

ரெட்ரோ என்கிற மீன் குழம்பு ஊற்றப்பட்ட வெரைட்டி ரைஸ் சாப்பிட நேர்ந்தது….

1978ல் ‘கன்னித்தீவு’ என்றொரு ஜெய்சங்கர் படம் வந்தது. ராதிகா, சீமா ஹீரோயின்களாக நடித்தனர். கன்னித்தீவு எனும் தீவில் கன்னிப்பெண்களை மட்டும் அத்தீவின் பூதம் போன்ற வாய் ஒன்று அழைத்துக்கொண்டுவிடும். உள்ளூர்வாசிகள் தங்கள் வீட்டுப்பெண்களை அனுப்புவர். பின் அவர்கள் திரும்பமாட்டார்கள். அதன் உண்மையை கண்டுபிடிப்பதே ஜெய்யின் வேலை.. அப்போதே சிசிடிவியெல்லாம் காண்பித்த ராமண்ணாவின் படம் அது.

அப்படி ஒரு ஃபாண்டஸி தீவுக்கதையை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். செயற்கை கை, இரும்புக்கை சூர்யா, சூர்யா தான் தீவின் வாரிசு, சிரிப்பு டாக்டர் போன்ற ஃபாண்டஸிக்களை அள்ளி விட்டிருக்கிறார் இயக்குனர். இது தான் 2K kids விருப்பமா?

படம் லீனியராக போவதால் நமக்கு எந்த கேள்வியும் எழாமல் தேமே என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். சூர்யா பற்றி க்ளைமேக்ஸில் ஒரு ட்விஸ்ட் வைத்தார்கள். அப்பாடா..இதையாவது வைத்தார்களே…

சண்டைகள் மட்டுமே படம் என அதே 80 கால திரைக்கதை உத்தி. என்டர் தி டிராகன்லயே பார்த்தாச்சு ப்ரோ..ஓ…அதனால் தான் 80களில் நடப்பது போல் எழுதினீர்களா?…80களில் இப்படி ரத்தம் சொட்ட சொட்ட மோதிக்கொள்ளும் கலாச்சாரமே இருந்ததில்லை என்பது தான் உண்மை. .


80களில் வில்லன்கள் பேசிக்கொள்ளும் ‘கோடி ரூபாய்’ என்பதே கிடையாது. ஐம்பது லட்சம் என்பதே பெரிய தொகை அப்போது.

பூஜா ஹெக்டே லவ் எபிஸோட் சுவையில்லை. இதை லவ்ஸ்டோரி என கார்த்திக் சுப்பராஜ் எப்படி சொல்கிறாரோ தெரியவில்லை.

வில்லன்களும்-ஹீரோவும் மைதானத்தில் சண்டையிட எதற்கு அந்தமான் தீவு?. அந்தமான் என லொக்கேஷன் வைத்துவிட்டால் புதுமையாகி விடுமா?.

முதல் காட்சி தொழில் செய்பவர்களை அழைத்து திருமண அறிவிப்பு செய்வதெல்லாம் குழந்தைத்தனமான திரைக்கதை.

ஆனால் இதையெல்லாம் மீறி படத்தை முழுவதும் பார்க்க ஏதோ ஒன்று தூண்டுகிறது. அது சூர்யா மட்டுமா எனத்தெரியவில்லை. அந்த ஒரே ஷாட் திருமணமண்டபக்காட்சி த்ரில்லடிக்கிறது.

இந்தியாவில் சாமானியன் சிரிக்க மறந்தவன் தான். சிரிப்பு டாக்டர் இந்தியாவுக்கும் தேவை.

ஜோஜு ஜோர்ஜை ஆஹா ஓஹோவென அறிமுகப்படுத்திவிட்டு டம்மியாக்கி விட்டிருப்பது இயக்குனருக்கே வெளிச்சம். பிரகாஷ்ராஜ் தேவையேயில்லை. நாஸரும் கூட.

இப்போது தான் இளையராஜாவின் ‘வானிலே தேன் நிலா ஆடுதே பாடுதே வானம்பாடி’யின் அருமை புரிகிறது. ஒரு சீன் சலிப்புக்கிடையில் இப்படி ஒரு பாட்டு வரம். அது ரெட்ரோவில் மிஸ்ஸிங்.

சூர்யா இனி ஒன்று செய்யலாம். நல்ல மலையாளப்படங்களை வாங்கி அதை ரீமேக் செய்து நடிக்கலாம். சூர்யா தொடக்கத்தில் வந்த போது அவர் கேரக்டர்களில் வெரைட்டி இருந்தது.

பேரழகன், பிதாமகன், சில்லுன்னு ஒரு காதல், காக்க காக்க, ஆதவன், அயன், சிங்கம் என இந்த கேரக்டர்கள் வெரைட்டி அவரை ரசிக்க வைத்தது. இந்த Angry young man ரோல் அவருக்கு சூட் ஆகவில்லை. கதையிலும் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.

அவரது நடிப்பு சலிப்பை தட்டுகிறது என்பதே நிஜம். கங்குவா, காப்பான், மாற்றான், அஞ்சான்களின் சூப்பர் ஹீரோ உலகிலிருந்து அயன், ஆதவன், வேல் என சூர்யா சாமானியர்களின் உலகுக்கு இறங்கி வரவேண்டும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *