குணச்சித்திர நடிகர் மதன் பாப்(71) உடல் நலக்குறைவால் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் காலமானார்.
தனது தனித்துவமான சிரிப்பால் மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தவர் நடிகர் மதன் பாப்.
இசைக் கலைஞராக தனது திரைப் பயணத்தை தொடங்கி பின் நாட்களில் நகைச்சுவை நடிகராக பிரபலமானார்.
நீங்கள் கேட்டவை படத்தில் அறிமுகமாகி 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.