நடிகை ரேவதி இயக்கத்தில் ஷோபனா நடித்த ‘மித்ர்: மை ப்ரெண்ட்’ என்ற ஆங்கில படத்துக்கு வி.பிரியாவுடன் இணைந்து திரைக்கதை எழுதியவர், சுதா கொங்கரா.
பிறகு டைரக்ஷன் பக்கம் கவனம் செலுத்தினார், சுதா.
தெலுங்கில் ‘ஆந்திரா அந்தகாடு’, வெங்கடேஷ் நடித்த ‘குரு’, தமிழில் விஷ்ணு விஷால் நடித்த ‘துரோகி’, மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’, சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’, இந்தியில் அக்ஷய் குமார் நடித்த ‘சர்ஃபிரா’ ஆகிய படங்களை இயக்கி
குறிப்பிடத்தக்க பெண் இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார்.
சுதா கொங்கரா, தற்போது சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா நடிக்கும் ‘பராசக்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சென்னையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற
சுதா கொங்கரா,, அங்கு விருது பெற்ற சமந்தாவை வானளாவ புகழ்ந்தார்.
‘சமந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது தைரியமும், துணிச்சலுடன் எதிர்த்து போராடுகின்ற மனப்பான்மையும் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்.
அவர் அழுதால் நானும் சேர்ந்து அழுவேன். ஒரு படத்திலாவது அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் – எனது ஆசை விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்’ என்றார், சுதா கொங்கரா.
—