நம்ம ஊர் டைரக்டர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.
பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள ‘ஸ்பிரிட்’படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம், செய்யப்பட்டிருந்தார்.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் இந்த படத்துக்கு தீபிகாவுக்கு ரூ.20 கோடி சம்பளம் பேசப்பட்டிருந்தது. டைரக்டருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ‘ஸ்பிரிட்’படத்தில் இருந்து தீபிகா விலகினார்.
அந்த கால்ஷீட்டை அவர் அட்லி படத்துக்கு கொடுத்துள்ளார்.
அட்லீ – அல்லு அர்ஜுன் இணைப்பில் உருவாகும் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், தீபிகா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரிக்கிறது.
இந்த படத்தில் 5 நாயகிகள்.மிருணாள் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பது உறுதியாகி இருந்தது. அவர்களைத் தொடர்ந்து முக்கியமான நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதர 2 நாயகிகளில் ஒருவராக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
—