சந்தானம் படத்திற்கு சிக்கல்.

சந்தானம் நடிப்பில் வெளிவர உள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் பக்தி பாடல் பயன்படுத்தியதற்காக திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்தானம். இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’.

‘தில்லுக்கு துட்டு’ திரைப்படத்தின் 4-வது பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தை, எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.
இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸா 47’ என்ற ராப் பாடலில் புகழ்பெற்ற பக்தி பாடலான ‘ஸ்ரீனிவாச கோவிந்தா’ வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது :
, ஏன் இந்துக்களின் உணர்வுகள் மட்டும் தொடர்ந்து புண்படுத்தப்படுகின்றன? நாங்கள் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்,

மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளோம். ஸ்ரீனிவாச கோவிந்தா பாடல் ஆன்லைனிலும், திரைப்படத்திலும் இருந்து நீக்கப்படாவிட்டால், நாங்கள் அவதூறு வழக்கு தொடர்ந்து 100 கோடி ரூபாய் இழப்பீடு கோருவோம்” என்று கூறியிருக்கிறார்.
என்ன நடக்கும் என்பது குழப்பமாக உள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *