தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர் நடிகை சிம்ரன். நடிப்பு, நடனம், நகைச்சுவை என அனைத்திலும் பேர் வாங்கியவர்.
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட அனைவருடனும் ஜோடியாக நடித்த பெருமை சிம்ரனுக்கு உண்டு.
இப்போது ,இயக்குநரும், நடிகருமான சசிகுமாருடன் இணைந்து ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் சிம்ரன் நடித்துள்ளார்.
சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததற்கான காரணம் குறித்து சிம்ரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர் அளித்த பதில் இது:
“நல்ல குடும்ப கதையாக இருப்பதால் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் நடிக்க உடனடியாக சம்மதம் தெரிவித்தேன். இன்னொரு காரணம், சசிகுமார். அவர் ஒரு மிகப்பெரிய இயக்குநர் மற்றும் நடிகர். அவருடன் நடிப்பது எனக்கு பெருமை தான்.
சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் கூடாது. திறமைக்கு முதலிடம் இருக்க வேண்டும். அந்த வகையில் சசிகுமாருடன் இணைந்து நடிப்பதை எனது அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன்.
இனி குடும்ப சென்டிமெண்ட் கதைகளில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். அதேபோல, ஆக்ஷன் வேடங்களில் நடிக்கவும் விரும்புகிறேன் ‘என்கிறார், சிம்ரன்.
—