ஆரம்பத்தில் இரண்டு இந்திப் படங்களிலும் டெலிஃபிலிமிலும் நடித்தவர் தேவயானி . மலையாளப் படத்திலும் நடித்திருக்கிறார்.
தேவயானியின் அப்பா மங்களுர்காரர் என்றாலும், அம்மா லட்சுமி கேரளத்தைச் சேர்ந்தவர்.
‘தரீமென் ஆர்மி’ மலையாளப் படத்தின் ஸ்டில்ஸை பார்த்துவிட்டு, தனது ‘தொட்டா சிணுங்கி’ பட்த்துக்காக , தேவயானியை கான்டாக்ட் பண்ணி இருக்கிறார் டைரக்டர் அதியமான்.
‘தொட்டா சிணுங்கி’ படத்தின் மற்றொரு நாயகியான ரேவதியைப் போல தானும் நல்ல நடிகையாகி பெயர் வாங்க வேண்டும் என்று விரும்பினாராம்.
‘காதல் கோட்டை’ படத்தில் தேவயானியின் கேரக்டர் கமலி. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி்ப்படமாக அமைந்தது இது அவருக்கு நல்ல பெயரை வாாங்கித் தந்ததது
பின்னாளில், சென்னை அசோக்நகரில் ,தான் கட்டிய வீட்டுக்கு கமலி இல்லம் என பெயர் சூட்டினார் தேவயானி.