லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’.சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கூலி படம் குறித்து அவர் அளித்துள்ள ‘அப்டேட்’இது :இந்த ஆண்டு எனது இசையில் 2 படங்கள் வெளியாகிறது.
முதலில் ‘கிங்டம்’ வெளியாகும். அதன் 40 நிமிடக் காட்சிகள் பார்த்தேன். அற்புதமாக இருந்தது. அடுத்து தலைவரின் ‘கூலி’ முழுப்படமும் பார்த்துவிட்டேன். ரொம்ப அற்புதமாக புதுமையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார், அனிருத்.
முதன் முதலாக ‘கூலி’ படத்தை முழுமையாக பார்த்துள்ளார் என்பதால் அவரது இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
—