கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக ரக்ஷண வேதிகே போன்ற அமைப்புகள், கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, கர்நாடகாவில் அவரது ‘தக் லைஃப்’ பட வெளியீட்டிற்கு தடை விதிப்பதாக அச்சுறுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசனின் உருவ பொம்மைகளையும், சுவரொட்டிகளையும் கர்நாடக ரக்ஷண வேதிகே உறுப்பினர்கள் எரிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த சர்ச்சைக்கு இடையே, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்து, “அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. நான் தவறு செய்திருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன்; இல்லையென்றால் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
—