வைகைப்புயல் வடிவேலுவுக்கு இரண்டாம் இன்னிங்ஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை.அவர் ஹீரோவாக நடித்த படங்கள் வரிசையாக சுருண்டன. காமெடி வேடங்களில் நடித்த சந்திரமுகி போன்ற படங்களும் கை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் பழைய சம்பவங்கள் குறித்து வடிவேலு மனம் திறந்து பேசினார்.அதன் விவரம்:
‘’ ஒருமுறை ஒரு பெரிய இயக்குனர் கிட்ட எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. ஸ்கிரிப்ட் பார்த்துவிட்டு அதில் டெவலப் பண்ணி நான் சொல்ல, அவர் சிரிச்சிட்டே இருந்தாரு.ஒரு கட்டத்தில் இல்லண்ணே, பேப்பருல டைப் பண்ணியாச்சி, அதுல என்ன இருக்கோ அதை மட்டும் பேசுங்கன்னு சொன்னார். அப்படியா? டெவலப் பண்ண வேண்டாமா? என்று நான் கேட்க, இல்ல வேண்டாம், அதுல உள்ளதை மட்டும் பண்ணுங்கன்னு மீண்டும் சொன்னார்.
பெரிய்ய்ய டைரக்டர், அவருக்கும் எனக்கும் தான் பிரச்சனை நடந்துட்டு இருந்துச்சு, அவரால் தான் 2, 3 வருஷமா நடிக்காமல் இருந்தேன். இதுக்கு மேல அவர் பெயரை சொல்ல விரும்பல-’என்றார், வடிவேலு .
ஷங்கர் பெயரை அவர் சொல்லவில்லை. ஆனாலும் வடிவேலு குறிப்பிடும் அந்த இயக்குநர் ஷங்கர் என்பதை ஊர்.உலகம் அறியும்.
ஷங்கர் தயாரிக்க வடிவேலு ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டு சில நாட்கள் ஷுட்டிங் நடந்த ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ பட அனுபவத்தைத்தான் வடிவேலு சொல்லியுள்ளார்.
–