‘அல்டிமேட் ஸ்டார்’அஜித்தின்‘டாப் 5 ‘திரைப்படங்களை பட்டியல் போட்டால் அதில் இடம் பெறும் சினிமாக்களில் ஒன்று- வாலி.
இன்று வரை கோடம்பாக்கம் சிலாகித்துக் கொண்டிருக்கும் படமாக நிலைத்திருக்கிறது. இப்போது நடிப்பில் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமான படம் – வாலி .
ஜோதிகா தமிழில் அறிமுகமான முதல் படம். அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், சிம்ரன், விவேக், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1999 ஆம் ஆண்டு வெளியானது..
வாலியில் அஜித் – சிம்ரன் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் ‘கிக் ‘ ஏற்றும் ரகம்.
தனது கற்பனை காதலி குறித்து சிம்ரனிடம் அஜித் விவரிப்பதும் அதற்கு சிம்ரன் கொடுக்கும் ரீ –ஆக்ஷனும் –வேற லெவல்.
இந்த படத்தில் சிம்ரன் நடித்த ப்ரியா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை மீனா தான்.
ஆனால், வாலி படத்தில் மீனா நடிக்க முடியாமல் போனது.
இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் மீனா பகிர்ந்த தகவல்:
‘ நான் சினிமாவுக்கு வந்து உயர்ந்த சமயத்தில் தான் அஜித் சூப்பர் கேரக்டர்கள் பண்ணினார். அப்போது படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர் அவருக்கு அமைந்துகொண்டிருந்தது.
வாலியில் நான்தான் நாயகியாக நடிக்க முதலில் ஒப்ப்ந்தம் செய்யப்பட்டிருந்தேன்- நான் அந்த கேரக்டரை மிகவும் விரும்பினேன் – ஆனால் அப்போது அஜித் மருத்துவமனையில் அட்மிட் ஆனதால், நான் கொடுத்த கால்ஷீட் வீணாகிவிட்டது.
அடுத்து அவர்கள் டேட்ஸ் கேட்கும்போது என்னால் கொடுக்க முடிவில்லை. அதனால் அந்த படத்தை மிஸ் செய்துவிட்டேன்.’
என்று மனம் திறந்தார், மீனா பொண்ணு.
—