மே.29 அசாம் மாநிலத்தின் முதல் வந்தேபாரத் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டுவருகிறது. அதன்படி, நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் சேவையை மாநிலங்கள் தோறும் படிப்படியாக அறிமுகம் செய்துவருகிறது. தமிழகம், கேரளா, மும்பை என பல மாநிலங்களில் ஏற்கனவே இந்த வந்தே பாரத் ரயில்Continue Reading

மே.26 இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா நாளை மறுநாள் (மே.28) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த திறப்பு விழாவையொட்டி, ரூ.75 நாணயம் புழக்கத்திற்கு வரவுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும்Continue Reading

மே.24 டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்ப்புத் தெரிவித்து, திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடமானது 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றம் கட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர்Continue Reading

மே.24 ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் புதிதாகத் திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னி சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் இந்திய கலைஞர்களின் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் மற்றும் விமானத்தின் புகை மூலமாக ‘வெல்கம் மோடி’ என எழுதியும் சிறப்பாக வரவேற்றனர். சிட்னி நகரில் கலாசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துContinue Reading

மே.23 பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா நாட்டிற்குச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டின் அலுவல் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை அந்நாட்டு பிரதமருடன் சேர்த்து கூட்டாக வெளியிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடந்த 19-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதலில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகருக்கு சென்ற வஅர், ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரேசில் அதிபர்Continue Reading

மே.21 ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி 10 அம்சத் திட்டத்தை வெளியிட்டார். ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் அமைப்பான ‘ஜி-7’ அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 19ம் தேதி தொடங்கியது. இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேனுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ்,Continue Reading

மே.20 ஜப்பானில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி7 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். அரசுமுறை பயணமாக ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கீனி ஆகிய 3 நாடுகளுக்குContinue Reading

மே.18 ஒடிசா மாநிலத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளை பிரதமர் நரேந்திமோ மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டுவது மற்றும் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துகொள்கிறார். புதுடெல்லியில் இருந்து இன்று பிற்பகல் காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர்,Continue Reading

மே.18 நடப்பாண்டில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். மத்திய அரசின் திட்டக்குழுவுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பினை பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்தது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திரமோடியும், துணைத்தலைவராக சுமன் பெரியும் இருந்துவருகின்றனர். இந்த அமைப்பின் ஆட்சிமன்றContinue Reading

மே.6 நான் ஒரு பைசா ஊழல் செய்துள்ளதாக நிரூபித்துவிட்டால்கூட என்னை பகிரங்கமாகத் தூக்கிலிடுங்கள் என பிரதமர் நரேந்திரமோடிக்கு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி கிளினிக் திறப்பு விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்Continue Reading