மீண்டும் முழுகொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை.
கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் மற்றும் கபிணி அணைகளில் இருந்து அதிகளவில் நீர் திறப்பதால் மீண்டும் முழுகொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.
தற்போது 117 அடியாக உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டக்கூடும் என எதிர்பார்ப்பு.
முழுக்கொள்ளளவை எட்டியதும் மேட்டூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி முதல் 70 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்பு.
70ஆயிரம் கன அடி வரை மேட்டூர் அணையில் இருந்து படிப்படியாக நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் வேண்டுகோள்.